நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில், முச்சக்கரவண்டியொன்று மோதியதில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 7.35 மணியளவில் சீதுவ, ஈரியகஹலிந்த புகையிரதக் கடவையில் இடம்பெற்றுள்ளது. புகையிரதம் மோதியபோது, முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் பயணித்திருந்தனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நால்வரும் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் கடும் காயங்களுக்கு உள்ளான இரண்டு பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆண்கள் இருவரும் பாரதூரமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.