Header image alt text

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடிமிர் புட்டின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலில் 73.9வீதம் வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதுடன் கடந்த 2012 ஆம் ஆண்டை விட இம்முறை அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ், அவருடன் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை அறியத்தருமாறு கோரி, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரிக்கு அண்மையாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதுக்காக பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். Read more

பளையில் நேற்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மகேணி பகுதியில் இராணுவத்தின் கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் புலிபாய்ந்தகல் பாலத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிரான், புலிபாய்ந்தகல் ஆற்றில் மீன்பிடிக்கத் தோணியில் சென்ற ஒருவர் பெண்ணொருவரின் சடலம் ஆற்றில் கரையொதுங்கி உள்ளதைக் கண்டு கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்தே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணம் அரியாலை முள்ளிப் பிரதேசத்தில் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்த்தர் ஒருவர் உடல் சிதறுண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 அளவில் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய செல்லையா கந்தசாமி என்ற குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். Read more