 டுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
வெளிவிவகார அமைச்சின் ஊடாக காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியம், காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு அறியப்படுத்தியதற்கு அமைய, அவரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.