Header image alt text

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்திற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம் நியமித்துள்ளார்.

இதனடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அலுவலகத்திற்கு ஜயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹட்டி பீரிஸ், சிரியானி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரஹீம், சோமசிறி லியனகே மற்றும் கணபதிபிள்ளை வேந்தன் ஆகிய ஆறு பேரும் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

அம்பாறை – கல்முனை பெரிய நீலாவணை பகுதியை ஊடறுத்து வீசிய பலத்த காற்று காரணமாக சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காற்று காரணமாக சுமார் 30 வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம் ஸியாத் தெரிவித்துள்ளார். பெரிய நீலாவணைப் பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் பலத்த காற்று வீசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் குறித்த பகுதியில் 54 கட்டடங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். Read more