புளொட் அமைப்பின் 29ஆவது வீரமக்கள் தின நிகழ்வு மட்டக்களப்பு புகையிரத வீதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் 15.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன்(பவன்), வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்(விசு), முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில், ’29 வது வீரமக்கள் தினம்’ நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து இருந்தார்.
புளொட்டின் 29ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று 15.07.2018 ஞாயிறு மாலை 3.00 மணியளவில் பிரான்ஸின் Salle Maxime Jobert , 21 Bis rue villot 93120 la Courneuve , Tram 1 : arrêt – Hôtel de Ville de La Courneuve என்னுமிடத்தில் தோழர் இளையதம்பி கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதன் (வசந்தன்) மற்றும் அவரது மகன் ச. வட்சலன், ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட 20ஆவது வருட நினைவஞ்சலி நிகழ்வு இன்று (15.07.2018) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.