இந்தியாவின் அந்தமான் தீவில் வசிக்கும் 48 இலங்கை தமிழர்களின் குடும்பங்களுக்கு காணி ஒதுக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், இலங்கையில் இருந்து பல தமிழ் குடும்பங்கள் ஏதிலிகளாக அந்தமான் – நிக்கோபர் தீவில் குடியேறினர். Read more
நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதம் மீது மன்னார் பகுதியில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை சராமாரியாகக் கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய, அவரகொட்டுவ பிரதேசத்தில் உள்ள இரசாயண தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் தற்போது தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிவேக புகையிரதத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாகக் குடியேறிய 6 இலட்சம் பேரை உடனடியாக சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கண்டறியும் நடவடிக்கையை கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் மலேசிய குடியேற்றத்துறை ஆரம்பித்தது.
அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருடன் கலந்துரையாடிமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
மத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை இந்திய விமான நிலைய அதிகார சபைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் எவ்வித யோசனைகளும் இல்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரனை, அந்த அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா? என்பது தொடர்பில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளை குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில், 5 சுங்க அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீள அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாகவே இவ்வாறு அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.