Header image alt text

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பாகிஸ்தானின் சுதந்திரமான ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதவியேற்பார் என தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி அறிவித்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமராக பதவியேற்கும் இம்ரான்கானுக்கு ஏராளமான சவால்கள் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 25 ஆம் திகதி தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமரும், ஊழல் வழக்கில் சிறையில் இருப்பவருமான நவாஸ் செரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி, Read more

இலங்கையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தனது தாயாரை பார்க்கச் சென்ற இலங்கை தமிழர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை வனத்துறையினர் தீவுப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது சிங்கிலி தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்ட நாட்டுப்படகினை சோதனை செய்தபோது குறித்த படகில் யாரும் இல்லாததால் தீவு பகுதி முழுவதும் வனத்துறையினர் சோதனை செய்தனர். Read more

தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, புத்திஜீவிகள் சபையின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “தற்கொலை தடுப்பு சர்வதேச தினம்”, அடுத்த மாதம் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு இந்தக் கலந்துரையாடல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் புதன்கிழமை (01) நடைபெறவுள்ளது. இலங்கை சுமித்ரயோ நிறுவனம், இதனை ஏற்பாடு செய்துள்ளது. தற்காலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, தமது அமைப்பு, திறந்த சித்திரப் போட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதென, அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். Read more

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார் பஸ் ஏ -321 ரக புதிய விமானமொன்று சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் குறித்த விமானம் ஜேர்மனியில் இருந்து இந்நாட்டிற்கு வருகை தந்திருந்தது. ,எதிர்வரும் தினத்தில் குறித்த விமானம் பயணிகள் சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிக்கந்த சேனபுர பகுதியில் உள்ள போதைப் பொருள் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு முகாமிலிருந்து நேற்று இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிக்கந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தப்பிச் சென்ற இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போதைக்கு அடிமையான நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களென தெரியவந்துள்ளது. Read more

விசா அனுமதிப்பத்திரமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அங்கிருந்து வெளியேற பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் திகதி தொடக்கம் குறித்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாறு விசா முடிந்தும் அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தண்டப் பணம் அறவிடாது அவர்களை மீள நாட்டுக்குரூnடிளி; அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

(ஆர்.ராம்)
தனது அரசியல் நலனுக்காக முரணான கூற்றினை வெளிப்படுத்தி தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எத்தனிப்பதாக புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து சொற்ப காலங்களிலேயே புளொட் அமைப்பிடம் இருக்கும் ஆயுதங்களை கையளிக்குமாறு எமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. Read more

சுங்க திணைக்கள அதிகாரிகள் 5 பேரை கட்டுநாயக விமானநிலையத்தில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குவைட் நாட்டில் இருந்து வருகைதந்த வெளிநாட்டவர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையே அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் போது அங்கு புலனாய்வு பிரிவொன்றை நடத்திச் செல்வதில் அவசியம் இல்லை என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.

சிறைச்சாலை புலனாய்வு பிரிவை உடனடியாக கலைக்குமாறு அண்மையில் வெளியிட்ட உத்தரவு சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். Read more

கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் உள்ள சிறு குளம் ஒன்றில் இருந்து புன்னைநிராவி 26 ம் வாய்க்காலைச் சேர்ந்த 31 வயதான சுபாஸ் என்ற இளைஞனின் சடலம் இன்று பிற்பகல் தர்மபுரம் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.

கடந்த 23 ஆம் திகதியில் இருந்து காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த குறித்த இளைஞனே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் தர்மபுரம் பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடயவியல் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர். Read more