Header image alt text

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளத்தை திருடிய இருவரை இன்றுகாலை கைதுசெய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் வாத்தியாகம மற்றும் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்துசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய தண்டவாளத்திற்கு அருகில் கழற்றி வைக்கப்பட்டிருந்த பழைய தண்டவாளங்களையே குறித்த சந்தேகநபர்கள் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more

பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக இந்த ஈ காட் (E-Card) முறை அமுல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்குப் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் மற்றும் குடியகல்வு குடிவரவு அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். கட்டுநாயக்க விமான சேவைகள் அதிகார சபையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், இதற்கென விமான நிலையத்தில் அமைக்கப்படும் ஈ-கேட்டைப் பயன்படுத்தி விமான நிலைத்திற்குள் பிரவேசிக்க முடியும். Read more

பாதுகாப்பு அமைச்சின், 2017ம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கையின் பிரகாரம், முப்படையினரும் வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 160.59 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதன்படி 4 ஆயிரத்து 318 ஏக்கர் அரச காணிகளும், 842 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட காணிகளில் 4 ஆயிரத்து 811.34 ஏக்கர் வடக்கிற்கும், 349.25 ஏக்கர் காணிகள் கிழக்கிற்கும் உரியன. Read more

டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 20 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அரிதான நீல நிற மாணிக்கக்கல் ஒன்றை மீட்டுள்ளதாக, டுபாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஒருவர் கைதாகியுள்ளார்.

கடந்த மே மாதம் 25ம் திகதி டுபாயில் நகர நிறுவனம் ஒன்றில் இருந்து இந்த மாணிக்கக்கல் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து நூற்றுக்கணக்கான விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், பல சி.சி.டி.வி காணொளிகளும் பார்வையிடப்பட்டு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். Read more

மன்னார் ´சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 42ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மனித புதைகுழி அகழ்வின் போது, மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாக இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

எனினும் தற்போது வரை மீட்கப்பட்டுள்ள எந்தவொரு மனித எலும்புக்கூடுகளிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அகழ்வு பணிகளை தொடர்ந்து இன்று அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மேலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 5 சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். Read more

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இந்த குழு கொழும்புக்கு வரவுள்ளது.

இலங்கை வரவுள்ள இந்த குழுவுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலக திணைக்களத்தின் உதவி அமைச்சர் கோ யேசோ தலைமைத்தாங்க உள்ளார். மேலும் இந்த குழுவினர் இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நவீனமயப்படுத்துவதற்கும் இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான கடன் ஒப்பந்தத்தில் இலங்கையும் உலக வங்கியும் கைச்சாத்திட்டுள்ளன. பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது General Education Modernization Project (GEM) இலங்கைச் சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களுடன் இணைந்ததாக பொதுக்கல்வியின் பாடவிதானங்களை நவீனமயப்படுத்துவதுடன் Read more

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கான தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்லுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளனர். இதன் பிரகாரம் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கான தேர்தல் ஜனவரி 5 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பிரதேசத்தில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகியிருந்த 3 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை அடுத்த மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் சுழிபுரம் பகுதியில் 6 வயதுடைய ரெஜினா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நியமனத்தினை சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிர்மல் கொஸ்வத்த வழங்கி வைத்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் 5 வருடங்கள் சேவையாற்றியவர்களில் முதல்கட்டமாக 100 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Read more