Header image alt text

இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுக கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் மன்னார் மனித புதைகுழியிலிருந்து நேற்று (06) மீட்கப்பட்டுள்ளது. மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணியானது 112 ஆவது நாளாக நேற்று சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டபோதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாமென காணமல் போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர். Read more

இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டீ. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு ஏற்ப தற்போதைய பிரச்சினையை மிக விரைவில் இலங்கையின் அரசியல் தலைவர்கள் தீர்க்க வேண்டும் என டெய்லி குவு செய்திக்கு வழங்கிய செவ்வியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் தமக்கு சார்பான எவரும் இல்லை எனவும் அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மதிக்கும் சட்டப்பூர்வமான அரசாங்கம் உருவாவதை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஹெரோய்ன் கொக்கெய்ன், மோபின், அபின் ஆகிய போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 96 பேருக்கு மரணத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று பொலிஸ் போதை பிரிவு அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் குறித்த மரணத்தண்டனை கைதிகளுள் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். மேலும் 275 பேருக்கு ஆயுட்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 34 பெண்கள் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார். Read more