Header image alt text

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி. டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிர்த்து தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரினால் குறித்த வழக்கு தொடர்பில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.

இருப்பினும் குமுதினி விக்கிரமசிங்க இன்று வழக்கு விசாரணைக்கு கலந்து கொள்ளாததால் குறித்த வழக்கின் தீர்ப்பை ஜனவரி 31ம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதி ஜனக் டி சில்வா உத்தரவிட்டுள்ளார். வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த பி.டெனிஸ்வரன்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார். Read more

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வணக்கத்திற்குரிய தம்பர அமில தேரர் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான ஓசல ஹேரத் ஆகியவர்களினால் குறித்த மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. குறித்த மனுக்கள் இன்று புவனெக அலுவிகார, சிசிர த ஆப்ரூ மற்றும் முர்த்து பெர்ணான்டோ ஆகியோர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Read more

இத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த ஷெஹாரா சோவிஸ் என்ற சிறுமியென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி வசித்து வந்த குளியலறையுடன் இணைந்தவாறு காணப்பட்ட ஆடை உலர்த்தும் இயந்திரம் ஒன்று உடைந்து விழுந்த போதே குறித்த சிறுமியும் அதனுடன் சேர்ந்து தவறி விழுந்துள்ள உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை வெரோனா நகர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். Read more

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று மூதூர் பிரதேச செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் மகஜர் கையளிப்பும் இடம்பெற்றது. மூதூரிலுள்ள சம்பூர் கங்குவேலி படுகாடு காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஜனநாயக மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகள் அனைத்தையும் உடனடியாக பொது மக்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும். மக்களுடைய காணிகளுக்கான ஆவணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இழுத்தடிப்புக்களை நிறுத்தி துரிதமாக காணி ஆவணங்களை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்களால் கோரப்பட்டது. Read more

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது.

இதனால், குறித்த இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும் இருக்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. Read more

தமிழ் மக்கள் ஒருபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்தினாலேயே ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்ததாக புளொட் அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்குகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். தற்போதைய நிலையில் நடுநிலை வகிக்க முடியும் என சிலர் கூறினாலும், நடுநிலை வகிப்பதென்பது மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதாக அமைந்துவிடும் என்பதினாலேயே தாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கு ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடிக்கு வெளிப்படையான ஜனநாயக ரீதியிலான தீர்வை காணவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கண்டியில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற அரசியல் நெருக்கடிகளிற்கு துரிததீர்வை காணலாம் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு ஜனநாயகரீதியிலும் வெளிப்படை தன்மையுடனும் தீர்வை காணலாம் என அமெரிக்க தீர்வை குறிப்பிட்டுள்ளார். Read more

பிறந்த நாளுக்கு கேக் வாங்க சென்றவர் விபத்தில் உயிரிழந்த துயரச் சம்பவம் நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வளைவில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வடிகான் ஒன்றிற்குள் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Read more