இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடிக்கு வெளிப்படையான ஜனநாயக ரீதியிலான தீர்வை காணவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கண்டியில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற அரசியல் நெருக்கடிகளிற்கு துரிததீர்வை காணலாம் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு ஜனநாயகரீதியிலும் வெளிப்படை தன்மையுடனும் தீர்வை காணலாம் என அமெரிக்க தீர்வை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் எடுக்கப்பட்டுள்ள சில நடவடிக்கைகள் அரசமைப்பிற்கு முரணானவை என்பது குறித்த சர்ச்சை காணப்படுவது உண்மை; இது எனது அரசாங்கத்தின் கரிசனைக்குரிய விடயமாக உள்ளதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையினதும் இலங்கை மக்களினதும் நட்பு நாடு என்ற அடிப்படையில் நாங்கள் அரசாங்கம் முற்றிலும் சட்டரீதியானதாக காணப்படுவதையும் அரசமைப்பு உட்பட இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக கட்டமைப்புகளை ஜனநாயக நடைமுறைகைள மதிப்பதையும் உறுதி செய்ய விரும்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இலங்கையர்களினதும் முழுமையான நம்பிக்கையை கொண்ட அரசாங்கம் காணப்படுவதையும் உறுதிசெய்ய விரும்புகின்றோம் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.