இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான ஏதிலிகள் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கியின் வடமேல் எரிரென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிப்பதற்காக துருக்கியை ஆட்கடத்தற்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு பயணிப்பதற்கு தயாராக இருந்த வேளையிலேயே குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹவையில் இருந்து வவுனியாவின் ஓமந்தை வரையில் 128 கிலோமீற்றர் நீளத்துடனான ரயில் பாதையை இந்திய நிதியுதவி ஒத்துழைப்புடன் புனரமைப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ரயில்வே ஊழியர்கள், எதிர்வரும் 9 ஆம் திகதி 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனரென, ரயில் செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
புலிகள் அமைப்பினர் வசமிருந்த, பெருந்தொகையான தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முல்லைத்தீவு பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.