Header image alt text

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக, பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ,

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டு மனு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இந்த மனுவை முழுமையான நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு, சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். Read more

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியதீன் ஆகியோரை பதவி விலக்கும் வரையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் இன்றுகாலை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக ஆட்பதிவு திணைக்களம் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார்.

பழைய தேசிய அடையாள அட்டையில் நிலவிய பல குறைப்பாடுகள் புதிய தேசிய அடையாள அட்டையின் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். புகைப்படத்தை மாற்றுதல் அல்லது முத்திரையை நீக்கி தகவல்களை மாற்றுதல் போன்றவற்றை புதிய அடையாள அட்டையில் செய்ய முடியாது என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். Read more

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும்போது அறவிடப்படுகின்ற கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றது. சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட மூவாயிரம் ரூபா இன்றுமுதல் மூவாயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

அதேநேரம் ஒருநாள் சேவைக் கட்டணமாக இருந்த பத்தாயிரம் ரூபா இன்று முதல் பதினைந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. அதேநேரம் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான விஷேட கடவுச்சீட்டுக்கு சாதாரண சேவையின் போது 2000 ரூபாவில் இருந்து 2500 ரூபாவாகவும், Read more

ஹம்பாந்தோட்டை ரூவன்புர உபரத்ன பௌத்த மத்திய நிலையத்துக்கு முன்பாவிருந்த மூன்று அடி உயரமான புத்தர் சிலைக்கு, நேற்று இரவு, விஷமிகள் சேதம் விளைவித்துள்ளதாக, மத்திய நிலையத்தின் அதிகாரி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

புத்தர் சிலையானது இரண்டாக உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை. இவை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விடயங்கள் கிடையாது.

இவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ரிஷாத்தின் அரசியல் அதிகாரம் தடையாக இருக்கும் என்பதால் அவர் அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். Read more

வவுனியா ஓமந்தை பகுதியில் நேற்று பிற்பகல் 3.10மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். மரணடைந்தவர் முன்னாள் பாடசாலை அதிபர் வையாபுரிநாதனின் மனைவியான திலகவதி (வயது82) ஆவார். இதேவேளை காமடைந்தவர்களுள் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மாலை நேர கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

இந்தியாவின் இரண்டாவது முறையாக மீண்டும் நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்றார். புதுடில்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் பல நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதாவின் எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். Read more

மன்னார் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றி வரும் ரி.சரவணராஜா உடன் அமுலுக்கு வரும் வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மன்னார் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மாணிக்கவாசகம் கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இன்று தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more