Header image alt text

இலங்கையில் தமிழ் மக்களின் வேதனையை போக்குவதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் கனடா வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்டூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பாரிய இழப்புக்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டதுடன், மேலும் பலர் காணாமலும் இடம்பெயர்ந்தும் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் இரண்டாம் ஒழுங்கை புதிய கொலனி பகுதியில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய மங்கநாதன் மகேஸ்வரன் என்கின்ற நபருடைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

மடாடுகம, கிரலவ பாலத்திற்கு அருகில் இருந்து ஒரு தொகை தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடையும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது 12 தோட்டாக்களும் இலங்கை இராணுவத்தின் சீருடையும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

யாழ். சண்டிலிப்பாய், சுன்னாகம், கோப்பாய், ஏழாலை போன்ற பகுதிகளில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் விசேட நிதியொதுக்கீட்டில்

புதிதாக கொங்கிறீட் போடப்படவுள்ள வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்களுடன் 16.05.2019 அன்று நேரில் சென்று பார்வையிட்டார். பாராளுமன்ற உறுப்பினருடன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். Read more

இலங்கையில் செயற்படுகின்ற முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குவைத்திலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு,

இலங்கையை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் 10 இணையத் தளங்களுக்கும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை அவசர கணினி நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

பிரித்தானியாவில் இருந்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் நாடு கடத்தப்படுகின்றமைக்கு, துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடுகடத்தப்படுகின்ற ஏதிலிகள் அவர்களது சொந்த நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு பிரித்தானியா 43 இலங்கை ஏதிலிகளை பலவந்தமாக நாடுகடத்தி இருந்தது. Read more

இலங்கையில், குற்றத்தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையே அண்மைக்கால வன்முறைகளுக்கான காரணம் என்று சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்ட போதும், அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமை கவலையளிக்கிறது. Read more