Header image alt text

ஜா-எல – ஏக்கல இரும்பு தொழிற்சாலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட, இராணுவ கனரக ஆயுத தோட்டாக்களில், பயன்படுத்தப்படாத 409 தோட்டாக்கள் காணப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த தொழிற்சாலையின் பொது முகாமையாளர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார். நேற்று குறித்த தொழிற்சாலை நீர்க்கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினரால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்து இராணுவத்தின் கனரக ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. Read more

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதிபதிகளான புவனேக அளுவிகார, ப்ரீதி பத்மன் சுரசேன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய பிரதிவாதிகள் சார்பில் மன்றில் ஆஜராவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று சட்டமா அதிபர் இதன்போது நீதிமன்றில் கூறினார். Read more

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மிகெல் மொரடினோஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது மிகெல் மொரடினோஸ், உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக தனது அனுதாபத்தைத் தெரிவித்ததுடன் இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இந்த கடினமான சந்தர்ப்பத்தில் முழு சர்வதேச சமூகமும் இலங்கையுடன் இணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more

தற்கொலைக் குண்டுதாக்குதல்களின் சூத்திரதாரியும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானிடமிருந்து, 20 இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக, அவரது சகோதரி மொஹமட் நியாஸ் மதனியா ஒப்புக்கொண்டுள்ளார்.

சஹ்ரானின் இளைய சகோதரியான 25 வயதுடைய மதனியா, நேற்றுமுன்தினம் (01), காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். நேற்றுமுன்தினம் மாலை, மதனியாவின் வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கிருந்து 20 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. Read more

நீர்கொழும்பு கிறிஸ்தோபர் வீதி, அன்ட்ரு சினிமா தியேட்டருக்கு அருகில் உள்ள வடிகானிலிருந்து, 109 ரவைகளை, படையினர் மீட்டுள்ளனர்.

நீர்கொழும்பு மாநகர சபை ஊழியர்கள், வடிகானை சுத்தப்படுத்தும் போது ரவைகளை இருப்பதைக் கணடு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த படையினர் வடிகானிலிருந்து ரவைகளை மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ரவைகளில் 93 ரவைகள் பாவிக்கப்படாதவை என்றும் 16 ரவைகள் பாவிக்கப்பட்டவை என்றும் படையினர் தெரிவித்துள்ளனர்.

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் 3 சந்தேகநபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர். Read more

தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் 60க்கும் மேற்பட்ட வாள்களை தயாரித்து வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து நீர்கொழும்புக்கு பேருந்தில் செல்லும் போது பேலியகொட பகுதியில் வைத்து அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் நீர்கொழும்பு – வடிக்காலை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் குறித்த வாள்களை தயாரித்து வழங்கியுள்ளார். Read more

ஜாஎல, ஏக்கலப் பகுதியில் உள்ள இரும்புத் தொழிற்சாலையொன்றிலிருந்து வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்திட்சர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜாஎல பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க கடற்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் குண்டுகளை செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளது.