Header image alt text

வவுனியாவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளை தங்க வைப்பதற்கு பௌத்த குருமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மடுக்கந்தை விகாராதிபதி தலைமையில் நகரசபை மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஓன்று இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பௌத்த குருமார், இங்கு அகதிகளாக வந்திருப்பவர்கள் விபரங்கள் அரச அதிபருக்கோ, பிரதேச செயலாளருக்கோ தெரியவில்லை. அப்படியென்றால் யார் இவர்களை இங்கு அழைத்து வந்தார்கள். Read more

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தார்.

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ். பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் அலுவலகத்தை இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். Read more

நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமையின் காரணமாக, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்தாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இலங்கை அதிபர் சங்கம் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட துன்பகரமான சம்பவங்களையடுத்து, மாணவர்கள் மனநல நீதியில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுடன், மாணவர்கள் வழக்கமான அட்டவணைக்கு ஏற்றவாறு செயற்பட சிறிது காலம் தேவைப்படுவதாக, இலங்கை அதிபர் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம் தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளது என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. Read more

கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு (ஷரி-ஆ) அனுமதி வழங்காதிருக்கவும் மத்ரசாக்களை, கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மேற்படி பல்கலைக்கழகம் மற்றும் மத்ரசாக்கள் குறித்து, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இதுபற்றி கலந்துரையாடப்பட்ட நிலையில், அவ்வனைவரதும் இணக்கத்துடன், மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பிரதமர் தெரிவித்துள்ளார். Read more

ஐ.எஸ் அமைப்பு குறித்த குறுந்தகவலொன்றை (SMS) தனது கையடக்கத் தொலைப்பேசியில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை எல்ல பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

எல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து எல்ல நகரில் இளைஞரொருவரைக் கைது செய்த பொலிஸார், குறித்த இளைஞனின் கையடக்கத் தொலைப்பேசியை சோதனை செய்தபோது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்த குறுந்தகவலொன்று இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். Read more

வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சி.4 ரக வெடி பொருட்கள் 270 கிராம் மற்றும் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா உடையொன்றையும் பொலிஸார் மீட்டதுடன், குறித்த வீட்டுத் தோட்டத்தின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

புத்தலைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, பிபிலைப் பகுதியின் கொன்கல்லந்த என்ற இடத்தில் அமைந்துள்ள வீடொன்றைச் சுற்றி வளைத்துத் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர். Read more

2008-09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7பேரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் தடுப்பில் உள்ள சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்ற நேவி சம்பத் உள்ளிட்ட 7பேரும் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 29ம்திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. கடந்த மாதம் 21ம் திகதி காலை, இலங்கையில் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் 3 விருந்தகங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் சுமார் 257 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரியான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் என கருதப்படும் சஹ்ரான் ஹஷீமின் பிரதான அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேர் நேற்றைய தினம் கல்முனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். Read more