Header image alt text

கைது செய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளையதினம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவின் குறித்த அறிக்கை இன்றையதினம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் மேலும் சில விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டி இருப்பதால், நாளை வரையில் அதனை ஒத்திவைத்திருப்பதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார். Read more

பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையானது, எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதிகளை பொறுப்பேற்கும் ரயில் நிலையங்களில் பொதிகளை சோதனையிடுவதற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் வேறு நபர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் படி இந்த இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். Read more

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவிலுள்ள தேசிய விசாரணை முகவரான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்திய பொலிஸ் பிரதானி ஆலோக் மிதாலின் தலைமையிலான அதிகாரிகள் குழுவே இலங்கைக்கு வந்துள்ளனர். இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் தொடர்பைக் கொண்டிருந்தமை தொடர்பில், விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் குறித்த நபர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டபோது அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் மேமாத முதல் பகுதியில் இங்கிருந்து சென்றுள்ளதுடன், அவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாக அந்நாட்டு செய்திகள் கூறுகின்றன. Read more

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபியின் வீடு, பாதுகாப்பு தரப்பினரால் நேற்று சோதனையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம்- கலாவௌ பிரதேசத்தில் உள்ள அவரது வீடு சோதனையிடப்பட்ட போதும், அங்கிருந்து சந்தேகத்துக்கிடமான எவ்வித பொருள்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வைத்தியரின் தந்தை, நெருங்கிய உறவினர்களிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். Read more

2018ஆம் ஆண்டுக்காக கல்வியல் கல்லூரிக்கு பயிலுனர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2016 ஆம் மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியற் கல்லூரிகளில் தேசிய கல்வி போதனா கற்கைநெறியை பயில்வதற்கு இந்த முறை இரண்டு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. Read more

நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு, பாடசாலை, அரச நிறுவனங்கள் மற்றும் பிரசித்தமான இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடைசெய்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் சில ஆசிரியைகள், நிக்காப் அணியாமல் பாடசாலைக்கு சமுகமளிக்க மறுத்து வருவதால், கல்லூரியின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட 9பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தின்போது   ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் தனியார் மற்றும் மூன்று நோயாளர் காவு வண்டிகளில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இரத்தத்தால் நனைந்து காணப்பட்டுள்ளது. Read more

குறுகிய காலத்தில் நாட்டினுள் தாக்குதகள் நடத்தப்படும் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. பதட்டகரமான சூழல் ஒன்று உருவாவது 99 வீதம் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் கண்காணிப்பு பலவீனமானால் எதிர்காலத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படலாம் என பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார். குருநாகல் பகுதியில் குழப்பமேட்படுத்த தேரர்கள் சிலரும் அவர்களுடன் இணைந்து பலம்பொருந்திய நபர்கள் சிலரும் முயற்சித்தனர் எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். Read more