கடந்த 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை நிறைவடைந்து விட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
குறித்த வழக்கு நேற்று (09) கோட்டை நீதவான் நீதிமன்றல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்ப்பில் ஆஜரான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவின் வாக்குமூலத்தில் உள்ள உண்மை, பொய்களை ஆராய்ந்த பின்னர் அதன் அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். Read more
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட இருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இரு இளைஞர்களை நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.