அம்பாறை, சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்கள், தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரும் இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானின் குடும்பத்தினரே உயிரிழந்துள்ளனர் என்றும் சம்பவத்தில் காயமடைந்த பெண்ணும் குழந்தையும், சஹரானின் மனைவியும் மகளும் என்றும் தெரியவருகின்றது.
காத்தான்குடியில் இருந்து இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்ட சஹ்ரானின் சகோதரி ஹாஷிம் மதனியா, சஹ்ரானின் மனைவியும் மகளும் காயமடைந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி பிரதேசத்துக்குள் கடந்த சில தினங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பறக்கும் ட்ரோன் கமரா தொடர்பான விசாரணைகளை இன்றுகாலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 03 பேருக்கு, கடந்த ஆண்டு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 2 பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்து.
வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நாவலபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் வீடு கட்டுவதற்கு தோண்டிய அத்திவார குழிக்குள் இருந்து நேற்றுமாலை பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.