Header image alt text

தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று (2019.04.29) முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. Read more

தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்புக்கு பொறுப்பான தலைவரான மொஹமட் பவாஸ் விசேட பொலிஸ் குழுவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

38 வயதுடைய மொஹமட் பவாஸ் வாழைத்தோட்ட தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கைதுசெய்யும் போது, அவரிடம் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சுவரொட்டிகள், அமைப்பின் போதனைகள் அடங்கிய பென்ட்ரைவ், போதனைகளுடனான காணொளிகள் அடங்கிய அலைபேசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் தெமடகொட பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் இப்ராஹீம் இப்திகார் எனும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து இரு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்தொளுகம பகுதியில் பொலிஸார் மற்றும் இலங்கை விமான படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more