ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு நாளை முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை ஏற்று கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், வேட்புமனுத் தாக்கல் தொடர்பில் ஆட்சேபனையை முன்வைக்க நாளை முற்பகல் 11 மணிமுதல் 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று முற்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் 41 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. Read more
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தொடர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க வேண்டாம் என ரயில்வே திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் ஊழியர்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் சடலம் ஒன்றை புதைப்பதற்காக மயானத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, ஆயுதங்கள் சிலவற்றை கண்டெடுத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் வைத்து அவர் கையொப்பமிட்டுள்ளார்.
நாளை முதல் காரியாலய புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவித நிபந்தனைகளும் இன்றி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தெரிவித்துள்ளார்.