பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் நியமிக்கப்பட்ட இலங்கைகான புதிய உயர்ஸ்தானிகர் தொடர்பில் பாகிஸ்தானில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாட் கட்டாக் அந்த பதவிக்கு பெயரிடப்பட்ட நிலையில். அதனை ரத்துச் செய்வதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது. பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய தூதுவராக சாட் கட்டாக்கை நியமித்தபோது, உரிய இராஜதந்திர நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு நாடுகளுக்கான பாகிஸ்தானின் உயர்ஸ்த்தானிகர்களை மாற்றம் செய்யப்படவுள்ளதாக பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதற்கமைவாக இலங்கைக்கான புதிய உயர்ஸ்த்தானிகரும் நியமிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.