 போக்குவரத்து சட்டவிதிகளை மீறும் சாரதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை சீட்டுக்களை மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சட்டவிதிகளை மீறும் சாரதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை சீட்டுக்களை மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் சாரதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை சீட்டில் குறிப்பிடப்படும் இலக்கத்தினை அதன் மறுபக்கத்தில் உள்ள தண்டனைகளுடன் அறிந்துக்கொள்ள முடியும். குறித்த நடைமுறைக்கான வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.