ஜேர்மன் நாட்டிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக பவானந், நிர்வாகப் பொறுப்பாளராக த.சிவகுமாரன், நிதிப் பொறுப்பாளராக சந்திரன் ஆகிய தோழர்களும்,
நிர்வாக அங்கத்தவர்களாக தர்மகுமார், சத்தியமூர்த்தி, வேலானந்தன், பிரபா ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக முன்வைக்கப்பட்ட 78,403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இறுதி பெறுபேறுகளை நவம்பர் 18ஆம் திகதி மதியத்துக்குள் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்னரும், தற்போது பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் அமைக்கப்பட்ட புதிய முருங்கன் பொலிஸ் நிலையம் நேற்று மாலை வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உடமையிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.