மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் – சபாநாயகர் கரு ஜயசூரியவை இன்று நாடாளுமன்றில் சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஒமர் அப்துல் ரஸாக், தூதரக துணைத்தலைவர் திருமதி கதீஜா நஜீஹா மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் நேற்று முன்தினம் இரவு இலங்கையை வந்தடைந்திருந்தார்.