நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானமொன்றை செயற்படுத்துவதை தடுத்து விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை எதிர்வரும் மார்ச் 20ம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது, குறித்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் எதிர்வரும் மார்ச் மாதம் 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பரிசீலிக்கப்படும் என நீதிபதி குழாம உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்ற மேற்கொண்ட தீர்மானத்தை தடுத்து விதிக்கப்பட்ட தடையுத்தரவு மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளனர்.