சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் நேற்று (10), கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழில் வடக்கு கிழக்கு காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், வடமாகாண காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. வவுனியாவில் வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால், வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் நேற்று முல்லைத்தீவிலும் இத்தகைய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.