ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெள்ளை வான் கடத்தல் பற்றிய, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை

கைதுசெய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரகசியப் பொலிஸாரிடம் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலிப் பீரஸ் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே, கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.பி. நெலும்தெனிய இந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.