கடந்த வருடத்தில் 51 ஆயிரத்து 659 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையுடன் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்ததால் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்நிலையில் டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.