20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் எழுத்துமுல மற்றும் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. Read more
9வது நாடாளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் (COPE) குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கீழியங்கும் பிற நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான அதிகாரம் கோப் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மங்களாராமய விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கியதைக் கண்டித்தும் தமிழர் பாரம்பரியக் காணிகளை புராதன பூமி என்ற பெயரில் கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு பன்குடாவெளியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று நடத்தப்பட்டது. இன நல்லுறவுக்குப் பாதகம் ஏற்படும் வகையில் செயற்படும் தேரருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அரச அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்,
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏஎல்எம் அதாவுல்லா இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணியும் உடையை ஒத்த ஓர் ஆடையை அணிந்தவாறு நாடாளுமன்றிற்குள் பிரவேசித்துள்ளார். இதனை எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்ததோடு நாடாளுமன்ற விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். குறித்த உடையினை அணிந்து நாடாளுமன்றிற்குள் பிரவேசிக்க முடியாது என தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் அவரை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றுமாறும் கோரினர்.
யாழ் நாகர்கோவில் மத்திய மகா வித்தியாலயம் மீதான அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் 21 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும். இன்றைய நினைவேந்தல் நிகழ்வுக்கு பாதுகாப்பு தரப்பு மற்றும் வலயக் கல்வி திணைக்களம் என்பன பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்க்கு பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்களில் ஆறாம் ஆண்டிற்க்கு மேற்பட்ட மாணவர்களே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பேருந்து பாடசாலை சேவை பேருந்து சிற்றூர்தி அலுவலக சேவை பேருந்து ஆகியன மாத்திரம் பயணிக்க முடியும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட காவல் துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 35 வயதுடைய கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவரநடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே மேலும் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின் போது துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்கப்பட்டுள்ளன. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லிரைச்சல் கிழக்கு சலாம் பள்ளி பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு இன்று முற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய உரைப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சொட்கண் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கத்தி என்பன மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் கனிஷ்ட பாடசாலைக்கு மாணவர்களை கொண்டு செல்லும் பெற்றோர்கள் மாணவர்களை இறக்கிய பின்னர் மாற்று வழி மூலம் பாடசாலையிலிருந்து வெளியே செல்கிறார்கள். இந்த மாற்று வழியானது பாடசாலையின் மறுபுறம் உள்ள அரச விடுதிகளின் அருகாமையில் உள்ளது. இந்நிலையில் இதனூடாக வாகனங்கள் பயணிப்பதால் தமக்கு அசௌகரியம் ஏற்படுவதாக தெரிவித்து அங்கு வசிக்கும் ஒருவர் வீதியின் பாதையை மூடி போக்குவரத்தை தடை செய்துள்ளார்.