சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியமானதென இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். காணொளி தொழில்நுட்பத்தினூடாக இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே பாரத பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். Read more
20 ஆவது திருத்தம் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். இன்று நடைபெற்ற S.W.R.D.பண்டாரநாயக்கவின் 61 ஆவது நினைவு தின நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். S.W.R.D. பண்டாரநாயக்கவின் 61 ஆவது நினைவு தின நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஹொரகொல்லவிலுள்ள பண்டாரநாயக்கவின் நினைவிடத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர,
அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அங்கீகரித்துள்ளது. சில திருத்தங்களின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்க கேட்போர் கூடத்தில், இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் கூட்டத்தில் இந்த அறிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன்போது, சில திருத்தங்களின் கீழ் குழுவின் அறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாலபேயிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இலகு ரயில் செயற்றிட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக Japan Today இன்று செய்தி வெளியிட்டுள்ளது. 15.3 கிலோமீட்டர் தூரம் கொண்ட குறித்த ரயில் செயற்றிட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஜப்பான் ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தால் 48 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. சலுகை அடிப்படையில் வழங்க இணக்கம் காணப்பட்டிருந்த இந்தக் கடனுக்கான வட்டிவீதம் 0.1 ஆகும்.
குவைட்டில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைட்டில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3 அதிகாரிகள் மற்றும் தூதரகத்தின் காப்பகத்தில் இருந்த 44 பணிப் பெண்களுக்கும் கோவிட் தொற்றுறுதியாகியுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை மீறாவோடை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பற்றைக்காட்டிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட துப்பாக்கி, வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களுவாஞ்சிக்குடி பகுதியிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட துப்பாக்கி கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவகம் அறிவித்துள்ளது.
தனு றொக் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனுவின் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாள்வெட்டில், படுகாயமடைந்த தனு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. காரில் பயணித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த தனுவை யாழ் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து இன்று நண்பகல் வழிமறித்து துரத்தி அருகிலிருந்த தனியார் கல்வி நிலையத்தில் வைத்து வெட்டியுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3349 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் மேலும் 28 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3186 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் 150 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.