இன்று ஆறு தமிழ்க் கட்சிகள் கூடி எதிர் வருகின்ற பிரதேச சபைத் தேர்தல் சம்பந்தமாக யாழ்ப்பாணத்தில் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தன. இந்த ஆறு கட்சிகளும் ஒன்றாக செயற்படுவது பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டபோது, அதில் க.வி விக்னேஸ்வரன் அவர்கள் தன்னுடைய கட்சியின் மான் சின்னத்திலேதான் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியபோது மற்றைய கட்சிகள் உங்களுடையது புதிய சின்னம் அது பதிவுசெய்யப்பட்டு ஆறுமாதங்கள் கூட ஆகவில்லை என்று தெரிவித்ததோடு, ஒரு பொதுவான சின்னத்திலே போட்டியிட வேண்டும் எனவும், இதற்கு அனைவரும் இணங்கினால் சேர்ந்து செய்யலாமென வலியுறுத்தியிருந்தார்கள். Read more
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் (CPA) ஸ்டீபன் டுவிக் (StephenTwigg) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்தார். இச்சந்திப்பு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் அரசியல் மற்றும் கலாசார உறவுகளுக்கு தமது நாட்டில் ஆதரவை வழங்குவதாகவும், எதிர்காலத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் சர்வதேசத்துறை துணை அமைச்சர் சென் சோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு, 2023 ஜனவரி 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கையில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இது 2023இல் சீனக் கட்சியின் முதல் உத்தியோகப்பூர்வ விஜயம் மற்றும் சீனா தேசியக்காங்கிரஸின் 20ஆவது மாநாட்டுக்கு பின்னரான முதல் பயணம் என்று தூதரக தரப்புக்கள் தெரிவித்தன.
திட்டமிட்டவாறு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடு நடவடிக்கைகளை செல்லுபடியற்றதாக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் W.M.R. விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தை கூறியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். அரசியல் கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் காலமானார். முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, மேல் மாகாண ஆளுநராகவும் செயற்பட்டுள்ளார்.