சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம், அரசியல் கட்சிகள், மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனு கோரலுக்கான திகதியை அறிவிப்பதற்கு முன்பிருந்தே சில தரப்பினர் தேர்தல் நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். Read more
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று(15) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.