தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மரண அச்சுறுத்தல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். Read more
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தனை கரிநாளாக பிரகடனம் செய்துள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரையில் மூன்று நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர். இந்தப் பேரணிக்கு, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியத்தளத்தில் செயற்படுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் தரப்பினரும் பூரண ஆதரவினை வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பெப்ரவரி முதல் வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோலை தளமாகக் கொண்ட குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிடியூட்டின் தற்போதைய தலைவராகவும் உள்ள பான் கீ மூன் பெப்ரவரி 06 ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளார்.