நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தனை கரிநாளாக பிரகடனம் செய்துள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரையில் மூன்று நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர். இந்தப் பேரணிக்கு, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியத்தளத்தில் செயற்படுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் தரப்பினரும் பூரண ஆதரவினை வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை சுதந்திரமடைந்து 75ஆண்டுகள் நிறைவுக்கு வருகின்றபோதும், குறித்த காலத்தில் தமிழ் மக்கள் சமமாக மதிக்கப்படாத நிலைமையே நீடிக்கின்றது.

இந்நிலையில் எதிர்வரும் சுதந்திர தினத்தினை கரிநாளாக நாம் பிரகடனப்படுத்தியுள்ளாம். வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்ரூபவ் நீதிக்காக போராடும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை கோரியும் இந்த ஆர்ப்பாட்டப்பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியானதுரூபவ் யாழ்.பல்கலைக்கழத்திலிருந்து சுதந்திரதினத்தன்று காலையில் புறப்படவுள்ளதோடு, அங்கிருந்து யாழ்நகருக்குச்சென்று பின்னர் கிளிநொச்சி நோக்கி பயணிக்கவுள்ளது. முதலாம் நாள் பயணம் கிளிநொச்சியில் நிறைவுக்கு வரவுள்ளதோடு, இரண்டாவது நாள் பயணம் அங்கிருந்து ஆரம்பித்து வவுனியா, நோக்கி செல்லவுள்ளது. பின்னர் இறுதி நாளில் ஆர்ப்பாட்டப்பேரணியானது, மட்டக்களப்பில் நிறைவுக்கு வரவுள்ளது. இதன்போதுரூபவ் பிரகனடமும் வெளியிடப்படவுள்ளது.