P1420172வட்டுக்கோட்டை வட்டு இந்துக் கல்லூரியில் நடைபெற்று முடிந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியர்க்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 17.02.2017 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலையின் அதிபர் தனபாலசிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்க்கான பரிசில்களை வழங்கிவைத்தார். இப் பாடசாலையின் கட்டிட புனருத்தாரண வேலைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 150,000.00 ரூபாவினை ஒதுக்கீடு செய்திருந்தார். இதன்மூலம் பாடசாலையில் நடைபெற்று முடிந்த புனருத்தாரண வேலைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் நேரில் பார்வையிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

P1420195 P1420209

P1420165