யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் 2017 இல்ல விளையாட்டுப் போட்டி இன்று 15.02.2017 புதன்கிழமை பாடசாலையின் அதிபர் நா.மகேந்திரராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். விருந்தினர் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில்,
தங்களுடைய குழந்தைகளுக்கு யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் முதலாம் வகுப்புக்கு அனுமதி பெற்றுத் தரும்படி மார்கழி மற்றும் தை மாதங்களில் மிகப் பெருமளவிலான கிராமத்துப் பெற்றோர்கள் எங்களிடம் வந்து வினயமாகக் கேட்டுக் கொள்வார்கள். அதிபர் மகேந்திரராஜா அவர்கள் தனிப்பட்ட ரீதியில் உங்களுடன் நண்பர் என்கிற ரீதியில் நீங்கள் கூறினால் அவர் அனுமதி தருவார் என்றும் கூறுவார்கள். அப்போது அவர்களுக்கு நான் கூறுவது, உங்களுடைய அயற் பாடசாலையை சிறப்புறச் செய்யவேண்டும். ஆகவே, நீங்கள் உங்கள் அயற் பாடசாலைகளில் உங்கள் பிள்ளைகளை அனுமதியுங்கள். Read more