இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்றுகாலை இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் வெளியுறவு செயலரிடம் கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பிலும் தமது கரிசனையையும் எடுத்துரைத்துள்ளனர். மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக இந்திய வெளியுறவு செயலர் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு உறுதி வழங்கினார். Read more