தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக ரவிராஜ் கொலை வழக்கு விஷேட ஜூரி சபை முன் விசாரிக்கப்பட்டு, சந்தேகநபர்களான ஐவரும் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது. எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை விஷேட ஜூரி சபை முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது சட்டத்துக்கு முரணானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Read more