Header image alt text

sf (1)மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை சேர்மன் வீதியிலுள்ள ராமலிங்கம் யோகராசா என்பவரின் குடிசை வீடு கடந்த 02ஆம் திகதி எதிர்பாராத விதமாக தீப்பிடித்தமையினால் வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாகின. அத்துடன், உடுதுணிகூட இல்லாத நிலையில் 7பேர் கொண்ட குறித்த குடும்பம் மரத்தின் கீழ் நிர்க்கதிக்குள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில் 02.02.2017அன்று தீயினால் எரிந்த வீட்டுப் பகுதிக்கு 03.02.2017 அன்றுகாலை சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் முதல் கட்டமாக பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்ததோடு, மீண்டும் அவர்களுக்கான ஏனைய உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். Read more

zxcxzcஎதிர்வரும் 10.02.2017 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ”எழுக தமிழ் எழுச்சிப் பேரணி” தொடர்பில் தெளிவூட்டும் துண்டுப்பிரசுரங்கள் இன்று விநியோகிக்கப்பட்டன.

மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் இந்தப் பேரணி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்ற ”எழுக தமிழ்” ஏற்பாட்டுக் குழுவினர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.

sas (2)முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என கடந்த மாதம் 31ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எட்டாவது நாளாக இன்றுவரை தொடர்கின்றது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலும் இந்த போராட்டத்துக்கு இன்னும் பல இளைஞர்களை திரட்டி ஆதரவு வழங்கும் நோக்கிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், ஆசிரியர் சங்கமும் இன்றையதினம் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளனர். Read more

fdfdமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சத்துருக்கொண்டான் பிரதேசத்திலுள்ள ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய கதவுகள் உடைக்கப்பட்டு இனந் தெரியாதவர்களினால் ஆலயத்திலுள்ள பெறுமதியான பொருட்கள் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றுகாலை வேளையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஆலயத்திற்கு அருகிலுள்ள நீரோடைக்கு அருகில் ஆலயத்தின் உண்டியல் கிடப்பதை கண்டதுடன், குறித்த விடயத்தை ஆலய அரங்காவல் சபையினரிடம் தெரியப்படுத்தியதும் நிருவாகம் ஆலயத்தை பார்வையிட்டவேளை ஆலயத்தின் கதவுகள் உட்பட ஆலய கூரைகள் உடைக்கப்பட்டு கொள்ளை இடம்பெற்றிப்பதை அறிந்து மட்டக்களப்பு பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். Read more

xcvcvசயிடம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும் இலவச கல்வியை பாதுகாக்க கோரியும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. போராட்டக்காரர்கள் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடாக மட்டக்களப்பு நகருக்கு சென்று பின், கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை அடைந்து வாவிக்கரையூடாக பீடத்தினை சென்றடைந்தனர். Read more