போயஸ்கார்டனில் 3 மணி நேரம் நடந்த சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிற்பகலில் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக வரும் 9ம் தேதி பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more