Header image alt text

ddddfffffகிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசாங்க வெற்றிடங்களுக்கு அம்மாகாணத்தைச் சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் நேற்று முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பட்டதாரிகளை நேற்றையதினம் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கு போட்டிப் பரீட்சையின்றி அரசாங்க நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். ஏனெனில், அவர்கள் நான்கு, ஐந்து வருடங்களாகப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பயின்று வெளியேறுகின்றனர். இலங்கை நிர்வாக சேவை மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை ஆகியவற்றில் வேலைவாய்ப்புக்காக போட்டிப் பரீட்சை நடத்தினாலும் ஆசிரியர்களுக்கான நியமனம், முகாமைத்துவ உதவியாளர் நியமனம் உள்ளிட்ட அரசாங்க நியமனங்களுக்கு போட்டிப் பரீட்சை நடத்தப்படக்கூடாது. Read more

cvbncvcகிளிநொச்சியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு இரவு பகலாக இடம்பெற்று வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடைய போராட்டத்திற்கும், பரவிபாஞ்சான் மக்களின் நிலம் மீட்பு போராட்டத்திற்கும் சந்தை வர்த்தகர்களும் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டுள்ளனர்.

இன்றுகாலை சேவைச் சந்தையின் வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு சந்தையிலிருந்து, காணாமல் போனவர்களின் உறவினர்களுடைய போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கந்தசுவாமி ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்ற வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எமது மக்களின் காணி, காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவில்லை. Read more

UGC“பகிடிவதை“ என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொடூரங்களை முறையிடுவதற்கு, “கணினித் தொகுப்பு முறைப்பாடுப் பொறிமுறை” என்ற ஒன்றை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிறுவியுள்ளது.

“முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றவுடன் அது தொடர்பில் விசாரிக்கப்படும். முறையிட்ட பின்னர் அதனை மீளப்பெற முடியாது. பொய் முறைப்பாடுகள் செய்தால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ugc.ac.lk/rag/ எனும் இணையத்தளத்தினுடாக பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் இந்த முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. Read more

ertrtereகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 70 இற்கும் அதிகமானோர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் விரைவில் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என கோரியே இவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இரவுபகலாக தொடர்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

zxcxcகாணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா உட்பட உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலகத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், அரச அதிகாரிகள், ஆண், பெண் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். Read more

sdfsdfdsssssமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை பகுதியில் இரண்டு கைக் குண்டுகள் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. கிரான் கும்புறுமூலை மர முந்திரகை வீதியில் புதிதாக அமைக்கப்படும் உல்லாச விடுதிக்காக காணியை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டவேளை இரண்டு கைக் குண்டுகளை கண்டு வாழைச்சேனை பொலிஸாருக்கு உல்லாச விடுதியினர் அறிவித்துள்ளனர்.

இதன்பிரகாரம் வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு மட்டக்களப்பிலுள்ள குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். குண்டு செயலிழக்கும் பிரிவினர் அங்கு சென்று அவற்றை செயழிலக்கும் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வாழைச்சேனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.