உதயன் தமிழ் நாளிதழ் நடாத்திய சித்திரைப் புதுவருட விழா 2017 நிகழ்வானது யாழ். சுழிபுரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் கோயிலடியில் நேற்று (15.04.2017) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ் . மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், பல கல்விச் சமூகத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது மாணவர்கள் கௌரவிப்பும், பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றதோடு தேசியத்தின் சிறந்த இசைக் கலைஞர்கள் பங்குபற்றிய இன்னிசை இரவு நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கான பிரதான அனுசரணையினை துயுகுகுNயு ஐஊடீவு ஊயுஆPருளு வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.




