 கொழும்பு- மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா நகருக்கு அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்து 42 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு- மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா நகருக்கு அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்து 42 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும் தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இந்த விபத்தில் இ.போ.ச பஸ்ஸின் சாரதியே உயிரிழந்துள்ளாரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.