Header image alt text

யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர்க்கு உதவி-

P1060818யாழ். வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் மேற்கொள்ளப்படும் தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் செயற்திட்டத்தின் கீழான நடவடிக்கைகளில் ஒன்றான, வட்டுக்கோட்;டை இந்து வாலிபர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர உதவி தொடர்பில் புலம்பெயர் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகைப் பணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரிடம் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் அவ் அமைப்பினரிடம் கடந்த 16.07.2015 அன்று ஒப்படைக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் குறிப்பிடுகையில்,

Read more

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் கூட்டமைப்புக்கே-கரவெட்டியில் தேர்தல் கருத்தரங்கு-

tna (4)யாழ். கரவெட்டியில் கரவெட்டி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றுமாலை 6மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு இடம்பெற்றது. கரவெட்டி ஒன்றியத்தின் தலைவர் திரு. பொன்னம்பலம் அவர்களுடைய இல்லத்தில் திரு. சிற்றம்பலம் செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் யாழ்.மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், அருந்தவபாலன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ் மக்களுடைய ஒற்றுமை, அதன் பிரதிபலிப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி, இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் என்பன தொடர்பில் தெளிவான விளக்கவுரையினை வழங்கி விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அத்துடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுடைய ஒட்டுமொத்த ஆதரவினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கி யாழ் தேர்தல் மாவட்டத்தின் ஏழு ஆசனங்களையும் கைப்பற்றி வெற்றிபெறச் செய்யவேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்கள். இந்நிகழ்வில் திரு. இளையதம்பி ராகவன் அவர்கள் நன்றியுரையாற்றினார். இத் தேர்தல் கருத்தரங்கில் கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த பல கல்விமான்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

பிரான்ஸில் 26ஆவது வீரமக்கள் தினம் மற்றும் கறுப்பு ஜூலை தினம்-(படங்கள் இணைப்பு)

ploteதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 26ஆம் வருட நினைவுதின நிகழ்வும், கறுப்பு யூலையின் 32ஆம் ஆண்டு நினைவுதினமும் புளொட்டின் பிரான்ஸ் கிளையின் ஏற்பாட்டில் பிரான்ஸின் Metro Gallieni, La Girafe, 154 Avenue Gallieni, 93170 Bagnolet  என்னுமிடத்தில் எதிர்வரும் 26.07.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00மணிமுதல் 20.00 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகத் தோழர்கள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினமும், வெலிக்கடைச் சிறையிலே 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பவற்றை நினைவுகூரும் வகையில் கறுப்பு யூலை நினைவு தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

26ஆவது வீரமக்கள்தின நிகழ்வின்போது கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் மற்றும் மறைந்த தோழர்களின் உருவப்படங்களுக்கு மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்படுவதுடன் அஞ்சலி உரையும் இடம்பெறவுள்ளதோடு, கறுப்பு யூலை நினைவுதின நிகழ்வும், நினைவுரையும் இடம்பெறவுள்ளது.

Read more

பாதுகாப்பு செயலாளர் வடபகுதிக்கு விஜயம்-

defenceபாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றதன் பின்னர், பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.எம்.யூ.டி.பஸ்நாயக்கவின் முதலாவது வடக்கிற்கான விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள காணிகளை உரியவர்களிடம் கையளிப்பது குறித்து மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த விளக்கமளித்துள்ளார். அத்துடன் யாழ் பகுதிக்கான கடற்படை மற்றும் வான்படை கமாண்டர்களும் தமது பணிகள் குறித்த விளக்கத்தினை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் மீள்குடியேற்ற, புனர்நிர்மாண மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பொன்றையும் முன்னெடுத்துள்ளார் என, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில். 15 ஆயிரம் பேர் தபால்மூலம் வாக்களிக்க தகுதி-

reயாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆகஸ்ட் 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த 14 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதியானவர்களின் பட்டியல்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். எனினும் கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாக்களிப்புக்கு தகுதி பெற்றவர்கள் தொடர்பிலான விபரங்கள் இன்னமும் முடிவுறுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கிளிநொச்சி மாவட்டத்தில் 1861பேர் விண்ணப்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 1939 பேரும், மன்னாரில் 2613 பேரும்தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

மருதனார்மடத்தில் கூட்டமைப்பின் முதலாவது பரப்புரைக் கூட்டம்-

tna (4)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பரப்புரைக்கூட்டம் மருதனார்மடத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியின் தலைவர்கள் அனைவரும் பங்கெடுக்கும் மாபெரும் கூட்டமாக இந்தக் கூட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேரில் வடக்கு – கிழக்கில் 5தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. இதற்கான கூட்டமைப்பின் முதலாவது உத்தியோகபூர்வ பரப்புரைக்கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3மணிக்கு மருதனார்மடம் சந்தைத்தொகுதிக்கு முன்பாக நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஐ.தே.கவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் கண்டியில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகியது. அதேபோல ஐ.ம.சு.முவின் பிரச்சார கூட்டம் 17 ஆம் திகதி அனுராதபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையில் ஆரம்பமாகியது.

ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள் நாளை இலங்கை வருகை-

european unionஎதிர்வரும் பொதுத் தேர்தலின் கண்காணிப்புப் பணிகளுக்காக மூன்று சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். ஐரோப்பிய சங்கம், பொதுநலவாய நாடுகளின் சங்கம் மற்றும் தெற்காசிய கண்காணிப்பாளர்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளே இவ்வாறு கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் இம்முறை தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக 110 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வரவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கண்காணிப்பு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் நாளை நாட்டுக்கு வரவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையளவில் தமது கண்காணிப்புப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

சிறப்பு முகாமில் இருந்த 4 இலங்கையர்கள் விடுதலை-

release 01தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் 4 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 19 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வலியுறுத்தி சில மாதங்களாக உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் 4 பேரை விடுதலை செய்து தமிழக அரசு கடந்த 11-ம் திகதி உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஈழ நேரு, மதுரை திருவாதவூர் முகாமைச் சேர்ந்த உமாரமணன், ஈரோடு பவானிசாகர் முகாமைச் சேர்ந்த ரமேஷ், சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ஜெகன் எனும் ஸ்ரீஜெயன் ஆகிய 4 பேர் நேற்றுமாலை திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தி ஹிந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

யாழில் கன்டர் ரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து-

ereகன்டர் ரக வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பிரதான வீதியில் தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சிலர் கிளிநொச்சியில் கொங்கிறீற் வேலை முடித்து விட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவேளை, பிரதான வீதி வழியாக செல்லும் போது, வாகன சாரதிக்கு தூக்கக் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது வாகனத்தை அவர் மின் கம்பம் ஒன்றில் மோதியுள்ளார். இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 14 நபர்களும் சிறு காயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் தொடர்பில் 271 முறைப்பாடுகள் பதிவு-

election violenceபொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் அதிகபடியாக 110 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காட்சிபடுத்தப்பட்டமை குறித்தும் 35 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. பொருட்கள் விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் 39 முறைப்பாடுகளும் அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்திமை தொடர்பில் 35 முறைப்பாடுகளும் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ளன அரச ஊழியர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் ஏழு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபடியான தேர்தல் முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. சுமார் 36 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச உதவி முகாமையாளர் சேவைக்கு 4000பேரை இணைக்க தீர்மானம்-

sri lanka (4)அரச உதவி முகாமையாளர் சேவைக்கு 4000 பேரை இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல கட்டங்களின் கீழ் புதிய சேவையாளர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார். அரச உதவி முகாமையாளர் சேவையாளருக்கான தேர்வு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சை நடத்தவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாதம் முதல்வாரத்தில் இடம்பெறும் எனவும் அரச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 10ம் திகதிவரை வாக்காளர் அட்டை விநியோகம்-

votesஆகஸ்ட் 17ம்திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அச்சடிக்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. அந்தவகையில் 22 மாவட்டங்களிலும் சுமார் ஒருகோடியே 50 இலட்சத்து 496 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இம்மாதம் 29ம் திகதி நாட்டிலுள்ள தபால் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டு ஆகஸ்ட் 10ம் திகதிக்குள் வீடு வீடாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும். ஆகஸ்ட் 2ம் திகதி மற்றும் 9ம் திகதி ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசேட வாக்காளர் அட்டை விநியோகிக்கும் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். எனினும் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் ஓகஸ்ட் மாதம் 10ம் திகதிக்கு பின்னர் அந்தந்த அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களுக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளமுடியும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read more

CardBavanS Viyalendran

18ம் திகதிக்குப் பின் புதிய அரசியல் யாப்பு – சம்பிக்க-

Chambicஎந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய அதிகாரம் கொண்ட ஆணைக்குழு அடுத்த அரசாங்கத்தில் உருவாக்கப்படும் என கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5 ஆண்டுகள் நாட்டை கட்டியெழுப்பும் பொருளாதார திட்டம் முன்வைக்கப்படும். ஓகஸ்ட் 18ம் திகதி உருவாக்கப்படும் அதிகாரத்துடன் கூடிய புதிய பாராளுமன்றில் விருப்புவாக்கு முறையை ஒழித்து, அதிகாரம் கொண்ட சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தும் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும். நாட்டில் 17 பொருளாதார வலயங்களை உருவாக்குவதோடு 10லட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். அவிசாவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வாக்குச் சீட்டு அச்சுடும் பணிகள் 10 மாவட்டங்களுக்கு பூர்த்தி-

vote2015ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக, 10 மாவட்டங்களின் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 15ம் திகதிமுதல் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 18 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், 10 மாவட்டங்களின் வாக்குச் சீட்டுகள் பூர்த்தியாகி உள்ளன. இதற்கிடையில் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டே அதிக நீளமான அமையும் என்றும் இது 29 தொடக்கம் 30 அங்குலங்கள் வரை நீண்டதாக காணப்படும் என்றும் கூறப்படுகிறது.

கிளிநொச்சியில் இளைஞர் குத்திக்கொலை-

knifeகிளிநொச்சி சாந்திபுரம் பகுதியில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்று தொடர்பில் எழுந்த வாக்குவாதம் முற்றியதால் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 28 வயதுடைய ராசலிங்கம் சாந்தரூபன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக முறைப்பாடு-

JVPஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் புடைசூழ தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பனர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இதனால் ஏனைய வேட்பாளர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள அகதிகளுக்கு சலுகை குறைப்பு-

britain refugeesபிரித்தானியாவில் வசிக்கின்ற இலங்கையர்கள் உள்ளிட்ட அகதி அந்தஸ்து கோருகின்றவர்களுக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சலுகைப்பணம் குறைக்கப்படவுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இரண்டு பிள்ளைகளைக் கொண்ட அகதி குடும்பம் ஒன்றின் பெற்றோருக்கு இதுவரையில் 149.86 பவுண்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை இனிவரும் காலங்களில் 110.85 பவுண்களாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு அகதிகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அகதிச் சிறார்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்படுவர் என்றும் சபை கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் மத நிகழ்வுகளில் தேர்தல் பிரச்சாரம்-கபே-

caffeமுஸ்லிம் மத நிகழ்வுகளை சிலர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவது கவலையளிப்பதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே தெரிவித்துள்ளது. முஸ்லிம் மத நிகழ்வுகளை முன்வைத்து சிலர் பொருட்கள் விநியோகித்து அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதென கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் வன்முறைகள் குறித்து இதுவரை 261 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் உறவு சிவரூபனின் பிறந்தநாளையொட்டி கல்வி மேம்பாட்டுக்கு உதவி-

photo 1புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த திரு.க. சிவரூபன் அவர்களின் 50வது பிறந்தநாளன இன்று வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் கல்வித்திட்டத்தில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக அவர்களின் வங்கிக் கணக்கில் தலா 500ரூபா வீதம் வைப்பிலிட்டுள்ளார். இவ் சமூக உணர்வும் எமது இளைய தலைமுறையின் கல்வி வளர்ச்சியில் ஆர்வமுள்ள சிவரூபனுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், சிவரூபனைப் போன்றவார்களினால் கல்வி மேம்பாட்டுக்காக செய்யப்படும் உதவிகள் எமது தாயக உறவுகளின் எதிர்கால இளைய தலைமுறையினை ஒர் கல்விச் சமூகமாக மாற்ற முடியும். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையினர் வடக்கு முதலமைச்சர் சந்திப்பு-(படங்கள் இணைப்பு)-

pppதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது. இந்த விசேட சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை சார்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) ஆகிய கட்சிகளின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இச்சந்திப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை. இந்த கலந்துரையாடலின்போது, வடக்கு நிலைமைகள், இடம்பெயர்ந்த மற்றும் மீள்குடியேறிய மக்களின் நிலைமைகள், விடுவிக்கப்பட்ட பகுதிகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திகள், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

Read more

26ஆவது வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள்.!(படங்கள் இணைப்பு)

IMG_0468விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தலைவர்கள், போராளிகள், பொதுமக்களை நினைவு கூறும் “வீரமக்கள் தினம்” இன்று வவுனியா கோவில்குளம் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவகத்தில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுதினமான கடந்த 13ம் திகதிமுதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுதினமான இன்றுவரை (16-07) வீரமக்கள் தினம் நினைவுகூரப்படுகின்றது.

26ஆவது வருடமாக நடைபெற்ற வீரமக்கள் தினத்தின் இன்றைய நிகழ்வின்போது நினைவுச்சுடர் ஏற்றல், மலரஞ்சலி, கவி அரங்கு, நடன நிகழ்ச்சி என்பன இடம்பெற்றதுடன், புளொட் தலைவரின், தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை உள்ளடக்கிய விசேட உரையும் இடம்பெற்றது.

Read more

கூட்டமைப்பின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர்களும் இலக்கங்களும்-

TNA 2015நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2015ல் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி

அருந்தவபாலன் கந்தையா இல.1
அனந்தராஜ் நடராஜா இல.2
ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம் இல.3
ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் இல 4.
ஈஸ்வரபாதம் சரவணபவன் இல 5
கந்தர் நல்லதம்பி சிறீகாந்தா இல.6
தர்மலிங்கம் சித்தார்த்தன் இல.7
மதினி நெல்சன் இல.8
மாவை சோமசுந்தரம் சேனாதிராசா இல.9
சிவஞானம் சிறீதரன் .இல.10

ஆகிய இலக்கங்களின் கீழ் மேற்படி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு அறிவுறுத்தல்-

mahindaஎதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கு 3 தொலைபேசி இலக்கங்களை, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று அறிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே தேர்தல்கள் ஆணையாளர் இந்த இலக்கங்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இதற்கமைய, 011 2887756, 011 2887759 மற்றும் 011 2877631 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டோ அல்லது 011 2887717 மற்றும் 011 2877636 ஆகிய பெக்ஸ் இலக்கங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பியோ, தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு புளொட் அலுவலகத்தில் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_20150716_08421596126ஆவது வீரமக்கள் தினத்தின் இறுதிநாளான இன்று கொழும்பு புளொட் அலுவலகத்தில் மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன. இன்றுகாலை 8.30மணியளவில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி இடம்பெற்றது.

Read more