ராஜபக்சவின் கொடூர ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நாவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும், இலங்கையில் 60 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு 2016ஆம் ஆண்டில் கிடைக்க வேண்டுமென அரசையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தவும் ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தவறாது வாக்களிக்க வேண்டும்.தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் மீண்டுமொருமுறை நடைபெறாமல் இருக்கவேண்டும் எனில் உண்மை கண்டறியப்பட வேண்டும். பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். இதேவேளை, போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.
