Header image alt text

கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம்-(படங்கள் இணைப்பு)

kaithadyதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக யாழ்.மாவட்டத்தில் இலக்கம் 07 இல் போட்டியிடும் வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இதன்போது வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடன், வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், ஜேர்மன் கிளைத் தோழர் ஜெகநாதன், நோர்வே கிளைத் தோழர் ராஜன் மற்றும் ஆதரவாளர்களும் தேர்தல் கருத்தரங்குகளை நடாத்தி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். சுழிபுரம், கைதடி, கோப்பாய், மாவட்டபுரம், நந்தாவில், நீர்வேலி, வியாபாரிமூலை கரவெட்டி, ஊரெழு, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. (இது குறித்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

Read more

தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பலவீனமாக்க தென்னிலங்கை சூழ்ச்சி-தர்மலிங்கம் சித்தார்த்தன்-

D.Sithadthanதிட்டமிட்ட குடியேற்றத்தினால் தமிழர் சனத்தொகை வீதத்தினைக் குறைத்து, அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து எமது அரசியல் பலத்தை பலவீனப்படுத்தும் தென்னிலங்கையின் சூழ்ச்சியை முறியடிக்கும் வகையில் எமது வாக்குகளை முழுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதித்துவத்தை பலமாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சுதுமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வட, கிழக்கில் தமக்குக் கிடைக்கக்கூடிய ஓரிரு தமிழ்ப் பிரதிநிதிகளை, அவர்களும் தமிழர்களின் பிரதிநிதிகள்தான் என்று உலகிற்குக் காட்டி தேசிய இனப்பிரச்சினைத் தீர்வை இழுத்தடித்து இல்லாமலாக்கும் சிங்களப் பேரினவாத தென்னிலங்கைக் கட்சிகளின் சூழ்ச்சிகர நடவடிக்கைகளுக்கு துணைபோகாமல் தமிழ் மக்களின் உண்மையான குரலாக ஒலிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஓரணியாக வாக்குகளை அளிக்க வேண்டும்.

Read more

கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சாவகச்சேரியில் தேர்தல் பிரசாரம்- (படங்கள் இணைப்பு)

11865258_875227722514794_552221683_oதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக யாழ்.மாவட்டத்தில் இலக்கம் 07 இல் போட்டியிடும் வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சாவகச்சேரி நகரப்பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் இளைஞர்கள் பலரும் அவருடன் கடைகள் மற்றும் வீடு வீடாகச் சென்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றிய தெளிவுபடுத்தல்களை வழங்கினார்கள்.

Read more

போராளிகளையும் இணைத்து எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலம்மிக்க சக்தியாக்குவோம்- கூட்டமைப்பின் வேட்பாளர் க.சிவநேசன்(பவன்)-

11880858_967466656608468_1872373484_nதற்போது நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழ் மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஏனைய அமைப்புக்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும் என புளொட் அமைப்பின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) நேற்று முன்தினம் (11.08.2015) முல்லைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகள் என்று எவரும் இல்லை, அனைத்து அமைப்புப் போராளிகளும் போராளிகளே. ஒரு காலத்தில் ஆயுதப் போராளிகளாக இருந்தவர்கள் இன்று சமூகப் போராளிகளாக தம்மை மாற்றிக் கொண்டுள்ளனர். புளொட் அமைப்பைச் சேர்ந்த நாம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் சமூக ஜனநாயக போராளிகளாக எம்மை மாற்றினோம். அது போலவே புலிகள் அமைப்பின் போராளிகள் பலரும் இன்று தமது இனத்திற்காக தம்மை சமூக விடுதலைக்காக ஜனநாயக போராளிகளாக மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றனர். இதில் எந்தத் தவறும் இல்லை. எனவே தமிழர் நலனில் அக்கறை கொண்ட இனவாத அரசின் பின்னணிகள் எதுவும் அற்ற போராளிகள் அமைப்புக்கள் எதிர்காலத்தில் படிப்படியாக ஜனநாயக அரசியற் நடவடிக்கைகளின் கூட்டமைப்பால் உள்வாங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதி அவர்கள் கௌரவிப்பு-(படங்கள் இணைப்பு)

P1020444வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில் நுட்பக்கல்லூரியில் பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதி அவர்களது ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இலவச கருத்தரங்கின்போது, சட்டத்தரணி தேவசேனாதிபதி அவர்களின் தன்னலம் அற்ற சேவையினைப் பாராட்டி நோர்வே நாட்டில் வசிக்கும் ஸ்கண்டிநேவியன் புகையிரத தொழில் நுட்பவியலாளரான யாழ். சுழிபுரத்தினைச் சேர்ந்த சிவராஜா இராஜசிங்கம் அவர்கள் சட்டத்தரணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 

Read more

தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்க பொன்விழா இசைக்கச்சேரியின் இறுவெட்டு வெளியீடு-(படங்கள் இணைப்பு)

ponvizha tellipalai hindu 11.08.2015 (1)யாழ். தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கத்தின் பொன்விழா கடந்த 27.06.2015) சனிக்கிழமை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான முன்றலில் நடைபெற்றிருந்தது. மேற்படி பொன்விழாவிற்காக நடாத்தப்பட்ட இசைக் கச்சேரியில் தென்னிந்தியாவின் கர்நாடக இசைப்பாடகி நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிய பாடல்களின் இசைத்தட்டு (இறுவெட்டு) வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (11.08.2015) தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான முன்றலில் நடைபெற்றது. தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ரஜீவ்காந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட விருந்தினர்களாக ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தர்மகர்த்தாசபை தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் திரு. ஆறு திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது முதலாவது இறுவெட்டினை தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பிரதம குருக்கள் பெற்றுக்கொண்டார்.

Read more