Header image alt text

வடமாகாண சபை செயல்பாடு குறித்து உறுப்பினர் ஜி.டி. லிங்கநாதன் எதிர்ப்பு

linganathanஇலங்கையின் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள எந்தவொரு பிரேரணையும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜி.டி. லிங்கநாதன் குறைகூறியுள்ளார்.
தீர்மானங்களை தன் ஆடையில் ஒட்டியபடி வந்த வட மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன்.
வடமாகாண சபையில் கடந்த காலங்களில் சுமார் 200 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதை நினைவுபடுத்திய லிங்கநாதன், அந்தப் பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவதில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என எழுத்து மூலம் கேள்வி செவ்வாய்க் கிழமையன்று கேள்வியெழுப்பினார். Read more

புதிய அமைச்சரவை செப்டம்பர் 2ம் திகதி சத்தியப்பிரமாணம்

parliamentபுதிய அமைச்சரவை செப்டம்பர் 2ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் முதல் முறையாக செப்டம்பர் முதலாம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது.

இந்த தருணத்தில் இதுவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர, நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சராக டீ.எம்.சுவாமிநாதன் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஐ.நா அமர்வில் இலங்கைக்கு சார்பாக அமெரிக்கா
 
usa sriஅடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பான பிரேரணை ஒன்றை ஆதரிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போர்க் குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. Read more

த.தே.கூ காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்! சுரேஷ்
 
sureshநடைபெற்று முடிந்த தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் தெரிவில் இலங்கை தமிழரசு கட்சி தன்னிச்சையாக செயற்படுமாயின் கூட்டாக இயங்கும் ஏனைய கட்சிகளுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது த. தே. கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார். Read more

தொல்புரம் சர்வோதயத்தில் ஆடிப் பிறப்பு நிகழ்வு

adypirappu01அண்மையில் ஆடிப் பிறப்பு நிகழ்வினை ஒட்டி தொல்புரம் சர்வோதயத்தில் ஆடிப் பிறப்பு நிகழ்வு சட்டத்தரனி செல்வி.சாருஜா.சிவநேசன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் கல்வியில் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் பா.தணபாலன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர் இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது Read more