தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்க பொன்விழா இசைக்கச்சேரியின் இறுவெட்டு வெளியீடு-(படங்கள் இணைப்பு)
யாழ். தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கத்தின் பொன்விழா கடந்த 27.06.2015) சனிக்கிழமை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான முன்றலில் நடைபெற்றிருந்தது. மேற்படி பொன்விழாவிற்காக நடாத்தப்பட்ட இசைக் கச்சேரியில் தென்னிந்தியாவின் கர்நாடக இசைப்பாடகி நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிய பாடல்களின் இசைத்தட்டு (இறுவெட்டு) வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (11.08.2015) தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான முன்றலில் நடைபெற்றது. தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ரஜீவ்காந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட விருந்தினர்களாக ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தர்மகர்த்தாசபை தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் திரு. ஆறு திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது முதலாவது இறுவெட்டினை தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பிரதம குருக்கள் பெற்றுக்கொண்டார்.