எமது கண்ணீர் அஞ்சலிகள்

கார்த்திகேசு சிவகுமாரன் (09-04-1956 – 09-11-2015)

suppuமரணத்துடன் உன் வாழ்வு முற்றுப்பெறுவதில்லை. உன் நினைவுகள் என்றென்றும்  உன்னை வாழவைத்துக் கொண்டிருக்கும்.

சுப்பர் என்று அழைக்கப்படும் கார்த்திகேசு சிவகுமாரன் 02.11.15 அன்று
மீளாத்துயில் கொண்டு விட்டான். புங்குடுதீவகத்தை பிறபப்பிடமாக கொண்ட
அவன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லுரியினதும் வட்டுகோட்டை
தொழில்நுடப்க் கல்லூரியினதும் பழைய மாணவனுமாவான்.
யாழ்பப்hணக் கல்லூரியின் கொக்கி அணியின் சிறந்த விளையாட்டு வீரனாகவும்
யாழ் மாவட்டக் கல்லூரி கொக்கி அணியிலும் அவன் சிறப்பான
விளையாட்டுக்காரனாக புகழ் பெற்றிருந்தான். அதுமட்டுமல்லாது ஏனைய
விளையாட்டுக்களிலும் ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்தான். சிறப்பாக அவன்
விளையாடுவதால் அவன் சுப்பர் (Super) என அழைக்கப்பட்டான்.1970களின் இறுதிப்பகுதியில் ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்து வந்த சிவகுமாரன்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினராகவும் அதன் அரசியல்
செயற்பாடுகளிலும் பங்கெடுத்து வந்தான். அரசியல் போராட்டங்களில் அதிக
ஈடுபாடு கொண்ட அவன் இறுதிவரை தனது செயற்ப்பாடுகளில் இருந்து
விலகியதுமில்லை. இலக்கிய சந்திப்புக்கள், ஜனநாயக அமைப்புகளின்
நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள் அனைத்திலும் அவனது பங்கெடுப்புகளை நாம்
மறக்க முடியாது. தனது இல்லத்திற்கு வருபவர்களை இன்முகம் கொண்டு
வரவேற்று அவர்களுக்கு விருந்து கொடுக்காமல் அவன் இருந்ததுமில்லை.

ஜெர்மனியில் தமிழீழக மக்கள் விடுதலைக் கழகத்தின் செயற்ப்பாடுகளில் இருந்து
80களின் இறுதிப் பகுதிகளில் இருந்து சிலர் விலகியபோதும் அவன் கழகத்தை
விட்டு விலகியிருக்கவில்லை. இறுதிவரை அதன் கழகத்தின் மீது
பற்றுக் கொண்டவனாகவே இருந்தான். விமர்சனங்கள், விவாதங்களில் தனது
கருத்தை ஆணித்தரமாக முன்வைப்பான். அவன் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள்
மீது அன்பாகவே இருந்தான். யாரையும் எதிரிகளாக அவன் பார்த்ததில்லை.
நட்புணர்வு கொண்டு எல்லோரிடமும் பழகி வந்தான்.

பலவருடங்கள் கழித்து அண்மையில் தனது சொந்த ஊரான புங்குடுதீவுக்கு
சென்ற அவன் அங்கு தனது வீட்டில் இலவசமாக குடியிருந்த வறிய
குடும்பமொன்றிற்கு பண உதவி செய்ததுடன் திரும்பவும் தான் பிறந்த
மண்ணிற்கு வருவதாக கூறிவிட்டு வந்தததையும் மறக்க முடியாது. சிறந்ததொரு
வாசிப்பு எண்ணம் கொண்டவன். எந்த விடயத்தையும் விவாதிக்கும் ஆற்றல்
கொண்டவன். தனது உடல் உபாதைகளை கவனத்திற் கொள்ளாது பொது
நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் அதற்கான உதவிகள் செய்வதில் அவன்
பின்னிற்பதில்லை.

ஒரு முதிர்ந்த தோழன். மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு உன்னத மனிதன் இறந்து
போனது நமக்கெல்லாம் ஒரு பெரிய இழப்பாகும். மரணம் என்றாலே ஒரு
சோகம் என்கிற அளவில் அவரை இனிப்பார்க்க முடியாதே என்கிற வருத்தம்
எமக்குள் மிகுகிறது. அவருக்குள்ள மிகச்சிறப்பு என்னவெனில் சுயநலமற்ற
பொது வாழ்க்கையில் அவர் தனது பங்களிப்பை சரியாகவே செய்திருக்கிறார்
என்பதாகும்.

மனிதர்களின் மரணம் என்கிற உண்மையை மறந்து வெறுமனே உயிர் தரித்தல்
என்கிற பொய்யில் வாழ்கின்ற மானிடர்களுக்கு இழப்புக்களை ஏற்க மனம்
ஓப்புக்கொள்வதில்லை. சிவகுமாரனின் மரணமும் எமக்குள் அது போன்ற
உணர்வை ஏற்படுத்தியிருந்போதும் ஒரு நல்ல தோழனின் அமரத்துவத்தை நாம்
என்றென்றும் நினைவில் கொள்வதுடன் அவரது பணியை நாம்
முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

அவரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தினர் உறவினர் மற்றும்
நண்பர்களுக்கு எமது அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவர்களது
பிரிவுத்துயரில் நாம் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – ஜெர்மன் கிளை plote-270x300